துறையூரில் பகுதிகளில் உங்களுக்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு பார்க்கலாம்.

வானிலை அறிக்கை



புலிவலம் பகுதியில் பேருந்து மோதி ஒருவர் உயிரிழந்தார்


துறையூர் - திருச்சி செல்லும் ஸ்ரீ பாலாஜி கதிரவன் பேருந்து மற்றும் இருச்சக்கரம்  வாகனம் நேருக்கு நேர் மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
முசிறி வட்டம், திருத்தலையூர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் பெ. நடராஜ் (50). இவர் அதே ஊரில் ஒலிபெருக்கி நிலையம் வைத்துள்ளார்.

வியாழக்கிழமை புலிவலம் பெட்ரோல் பங்க் அருகே பைக்கில்  சென்றபோது துறையூரிலிருந்து திருச்சி நோக்கி சென்ற ஸ்ரீபாலாஜி கதிரவன் தனியார் பேருந்து மோதி உயிரிழந்தார்.  புலிவலம் போலீஸார் வழக்குப் பதிந்து தனியார் பேருந்து ஓட்டுநர் நாகலாபுரத்தைச் சேர்ந்த மகாதேவனை (33) கைது செய்து விசாரிக்கின்றனர்.