துறையூரில் பகுதிகளில் உங்களுக்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு பார்க்கலாம்.

வானிலை அறிக்கை



துறையூர் குடிநீர் தொடர்பான விவரங்களை அறிய !!!


நமது துறையூர் பகுதியில் குடிநீர் தொடர்பான விவரங்களை இங்கு தெரிந்துக் கொள்ளலாம்.

நமது பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக இருப்பது முசிறி பகுதி  காவிரி ஆற்றில் அய்யம்பாலையம். அந்த ஆற்றுபடிகையிலிருந்து மெயின் குழாய் மூலம் காவிரி குடிநீர் துறையூர் பகுதிக்கு கொண்டுவரப்படுகிறது.   


நீர்த்தேக்கத் தொட்டிகள் (கொள்ளளவு):

  • தெப்பக்குளம் நீர் தொட்டி -  4.50 லட்சம் லிட்டர் 
  • பெரம்பலூர் சாலை நீர் தொட்டி -  4.50 லட்சம் லிட்டர் (இருமுறை நிரப்புதல்)
  • பழைய அலுவலக வளாக நீர் தொட்டி - 8.00 லட்சம் லிட்டர் 

குடி நீர் விநியோகம் செய்யும் முறை:

  • மெயின் குழாய் (ஆற்றுபடிகை) - 47 கி.மீ.
  • விநியோக குழாய் நீளம் - 26 கி.மீ.
  • பொது நீரூற்றுகள் - 175 
  • துளை கிணறுகள் - 96 
  • பவர் பம்புகளுடன் கூடிய துளை கிணறுகள் - 39 

குடிநீர் கட்டணம்:

மாதாந்திர குடிநீர் இணைப்பு கட்டணம் (1000 லிட்டருக்கு) பின்வரும் தொகைகள் வசூலிக்கப்படுகிறது.

  • வீட்டு உபயோகம் - ரூ.80.00
  • வணிக உபயோகம் - ரூ.305.00
  • தொழிற்சாலை உபயோகம்  - ரூ.505.00