துறையூரில் பகுதிகளில் உங்களுக்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு பார்க்கலாம்.

வானிலை அறிக்கை



நடுவலூர் அருகில் உள்ள பாலம் வேலை நடைபெறுகிறது

               புத்தனாம்பட்டி இருந்து துறையூர் செல்லும் வழியில், நடுவலூர் தம்பலாயி கோவில் அருகில், வாகன ஓட்டிகளை தினமும் அச்சுறுத்தி வந்த சறுக்குப் பாலம் தற்போது புத்தம் புதிய உயர்மட்ட பாலமாக அமையப்போகிறது. பாலப்பணிகள் தற்போது நெடுஞ்சாலைத்துறை, துறையூர் உட்கோட்டம் சார்பில் அதிகாரிகளின் சீரிய கண்காணிப்பில் வெகு விரைவாக நடை பெற்று வருகிறது.

                  
பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று நிறைவேற்றிய தமிழக அரசிற்கும்,
மதிப்பிற்குரிய திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும், மதிப்பிற்குரிய கோட்டப்பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை அவர்களுக்கும்,
துறையூர் உட்கோட்டம் மதிப்பிற்குரிய உதவி கோட்டப்பொறியாளர், உதவிப் பொறியாளர், சாலை ஆய்வாளர்கள் மற்றும் பணியினை இரவு பகல் பாராமல் செய்து வரும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தன்னார்வலர்கள் சார்பில் எல்லையில்லா நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு,
புத்தனாம்பட்டி மற்றும் நடுவலூர் தன்னார்வலர்கள்