துறையூரில் பகுதிகளில் உங்களுக்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு பார்க்கலாம்.

வானிலை அறிக்கை



புளியஞ்சோலை நீர்வரத்து அதிகரிப்பு

           புளியஞ்சோலை தற்போது நீர் வரத்து அதிகரித்துள்ளது. இவ்வேலையில் புளியஞ்சோலைக்கு குளிக்க வரும் நண்பர்கள் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள். பிளாஸ்டிக் கவர், பாட்டீல், கண்ணாடி பாட்டீல்களை எல்லாம் ஆற்றில் விடாமல் குப்பை சேகரிப்பு இடத்தில் போடவும்.

           இல்லையேல் அவை, விவசாய நிலத்தில் வந்து படிந்து, நிலத்தை பாழ்படுத்தி விடுகிறது. கண்ணாடி கிழித்து பலர் விவசாய வேலை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

           தயவு செய்து இயற்கை மாசுபடுவதை தடுக்க வேண்டும். இயற்கை நமக்கு கொடுத்த கொடையை அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்காக பாதுகாத்து விட்டு செல்வோம்.