துறையூரில் பகுதிகளில் உங்களுக்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு பார்க்கலாம்.

வானிலை அறிக்கை



திருச்சியில் ஒரு குற்றாலம் கோரையாறு அருவி


Thuraiyur Pachamalai Koraiyaru Falls

     திருச்சி மாவட்டம் துறையூர் அருகில் உள்ள பச்சைமலையில் கோரையாறு அருவி அமைந்துள்ளது. சுமார் 600 மீட்டர் சாலை ஒற்றையடி பாதை பயணம் மேற்கொண்டு இந்த அருவியை அடையலாம். அருவியில் குளிப்பதற்கு நீச்சல் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக சொந்த பாதுகாப்பு மற்றும் வனத்தை பாதுகாக்கும் வகையில் செல்ல வேண்டும். குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களே கோரையாறு அருவியின் சீசன் நாட்களாகும். 

    அருவியில் இருந்து வரும் நீர் கோரையாறு, தொண்டமாந்துறை வழியாக கல்லாற்றில் கலக்கிறது. பெரம்பலூரிலிருந்து வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரம் வழியாக தொண்டமாந்துறைக்கு சென்று, அங்கிருந்து விஜய புரம், அய்யர்பாளையம் வழியாக பச்சைமலை அடிவாரத்திலுள்ள கோரையாறு கிராமத்திற்கு செல்ல வேண்டும். இந்த கோரையாறு கிராமம் வரை அரசு டவுன் பஸ் செல்கிறது. கார், மோட்டார் சைக்கிள்களிலும் செல்லலாம்.

Credits: புத்தனாம்பட்டி சரவணன் நடேசன்

Hashtags: #Thuraiyur #Trichy #district #pachamalai #hills #koraiyaru #falls #tourist #places #natural